ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
எழுவர் விடுதலை: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!
20:00 May 20
குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்
18:33 May 20
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "உச்ச நீதிமன்றமே கரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச் சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையிலும் ஏற்கெனவே ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018ஆம் ஆண்டில் தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தின் அடிப்படையிலும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய உடனடியாக ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக, இவர்கள் சொல்லமுடியாத கஷ்டங்களையும், வேதனைகளையும் அனுபவித்து வருவதுடன், தங்கள் வாழ்வின் பெருவாரியான நாட்களை சிறையில் கழித்து மிகப்பெரிய விலையை இதற்காக கொடுத்துள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, சிறையில் உள்ள இந்த ஏழு பேரையும் விடுதலை செய்தவற்கு உடனடியாக உத்தரவிடவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தை டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரடியாக சென்று அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 'எழுவர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம்'- ஆளுநர் தரப்பு