தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

281 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்! - சென்னை அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித் துறையின் மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர், நூலகர் உள்ளிட்ட 281 பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) வழங்கினார்.

281 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
281 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!

By

Published : Jul 15, 2021, 8:43 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 15) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

மேலும் பள்ளிக்கல்வித் துறையில் பணியின்போது உயிரிழந்த 261 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், நூலகர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கும் பணிநியமன ஆணைகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

281 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கல்

அதன்படி முதற்கட்டமாக 10 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர், நூலகர் உள்ளிட்ட 281 பேருக்கு பணிநியமன ஆணைகளுக்கான உத்தரவு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:திமுகவின் தலையீடு அதிகமாக இருக்கிறது: ஓபிஎஸ்

ABOUT THE AUTHOR

...view details