தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்! - chief minister edappadi palanisamy

சென்னை: தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட 17 நபர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணை வழங்கினார்.

பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!
பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!

By

Published : Jan 9, 2021, 8:19 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், தொல்லியல் துறையில் காலியாகவுள்ள தொல்லியல் அலுவலர் பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்ட 17 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாகத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொல்லியல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீ. வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரை என்பவரின் மகன் வீ. கணபதி ராஜா என்பவருக்கு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையிலும், வீ. முருகதேவி என்பவருக்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன்கோட்டை நினைவுச் சின்னத்திலும், சிறப்பு நிர்வாக கருணை அடிப்படையில் காவலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சிறப்பு நிர்வாக கருணை அடிப்படையில் ஆணை வழங்கிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details