கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டந்தோறும் சென்று முதலமைச்சர் ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த 13ஆம் தேதி தூத்துக்குடி, 14ஆம் தேதி கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் திடீர் மறைவு காரணமாக இந்த பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. அவரின் இறுதி அஞ்சலி மற்றும் காரிய நிகழ்வுகள் முடித்துக்கொண்டு முதலமைச்சர் நேற்று சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில், 22ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலும், அக்டோபர் 29ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு நடத்தவுள்ளார். கரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை செய்யவுள்ளார். பின்னர் மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழிற்துறையினரைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிகிறார்.