தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினிகாந்த் உடல்நிலை: நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்! - நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

chief-minister-inquires-about-rajinikanths-health
chief-minister-inquires-about-rajinikanths-health

By

Published : Oct 31, 2021, 11:33 AM IST

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி மாலை லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். வழக்கமான பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் முன்னதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பை நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்

இன்னும் சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.31) காலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க : தேவர் ஜெயந்தியை புறக்கணித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்... மற்றொரு பிளவை நோக்கி நகர்கிறதா அதிமுக?

ABOUT THE AUTHOR

...view details