சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.8.2022) கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 30.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5 கோடியே 63 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதோடு 12 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கொளத்தூர் ஏரியினை மறுசீரமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
கொளத்தூரில் ரூ.12.30 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் - முதலமைச்சர் ஸ்டாலின்
ரூ.12.30 கோடி மதிப்பீட்டிலான கொளத்தூர் ஏரியினை மறுசீரமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை இன்று (ஆக. 13) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஜமாலியா பகுதியில் 30.77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.
இதையும் படிங்க:ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு