தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மண்டலப் புற்றுநோய் மையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.
மேலும், 31 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டடங்களையும் திறந்துவைத்து, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ நேரியல் முடுக்கி கருவி (Linear Accellarator) நிறுவுவதற்காக மூன்று கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கதிரியக்கவியல் புற்றுநோய் பிரிவுக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.