இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' - பள்ளிக் கல்வித் துறைக்கு அலுவலர் நியமனம் - ramasuntharam
சென்னை: 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பெறப்படும் மனுக்களுக்குத் தீர்வு காண்பதற்கு ராமசுந்தரம் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதைக் கண்காணிக்கவும், அதில் குறைகள் ஏதும் இருந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்திட பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக ராமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மாவட்டந்தோறும் ஒரு பொறுப்பு அலுவலரை நியமித்து, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையின் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தினை ஒவ்வொரு மாதமும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ்