சென்னை:பெகாட்ரான் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் (Pegatron Technology India Pvt . Ltd.) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரிடம், தமிழ்நாடு வழிகாட்டி (Guidance TamilNadu) நிறுவனம் வெளியிட்ட 'தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்' என்ற மலரை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள் என்ற மலரை வழிகாட்டுதல் தமிழ்நாடு என்ற நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த மலரை இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தொழில்துறை உயர்மட்டக் குழுக்கூட்டத்தில், பெகாட்ரான் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.