இரண்டாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மேகதாது அணை விவகாரம் தொடர்பான எதிர்க்கட்சித் துணைத் தலைவரின் கேள்விக்கு பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நீர் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விளக்கம் - எதிர்கட்சித் துணைத் தலைவர் துரை முருகன்
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரை முருகனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.
அதுமட்டுமல்ல, இந்த நீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்ற தெளிவான தீர்ப்பு உள்ளதை எதிர்க்கட்சி துணை தலைவருக்கே தெரியும். இது குறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே, கர்நாடகா எந்த வகையிலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக நமக்கு சாதகமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.