தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தொகுதி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளன. அந்த வகையில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மார்ச் 16, 17ஆகிய தேதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் இடங்களின் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களை ஆதரித்து பழனிசாமி தேர்தல் பரப்புரை! - தமிழ்நாடு சட்டப்பேரைவத் தேர்தல்
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மார்ச் 16, 17ஆகிய தேதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 16ஆம் தேதி, சேலத்திலிருந்து முசிறி, தோகை மலை வழியாக விராலிமலைக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி, அத்தொகுதியின் வேட்பாளரான விஜயபாஸ்கரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, தஞ்சாவூர், ஆகிய தொகுதிகளில் உள்ள ஆதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். மார்ச் 17ஆம் தேதி, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், நன்னிலம், மன்னர்குடி, திருவாரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.