தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் 159 இடங்களை கைப்பற்றின.
இந்நிலையில் இன்று (மே.7) காலை 9 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள் பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...!'எனக் கூறி முதலமைச்சராக ஸ்டாலின் பதிவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் முதல் நாள் பணிகள்! அரங்கில் கூடி இருந்தவர்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், 33 அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பதவியேற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள் இதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலிருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு ஸ்டாலின் சென்றார். அங்கு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள் அப்போது மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார். தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.
பின்னர் சென்னை மெரினா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள் தொடர்ந்து பெரியார் திடல் சென்ற அவர், பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள் இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்கு சென்றார். அதனைத் தொடர்ந்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம், பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதேபோல் புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை தொடர்பான கோப்பிலும் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள் முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள் பின்னர் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரு நாள் பணிகள் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க: 'புதிய ஆட்சி, மறுமலர்ச்சி, புதிய சிந்தனை, புதிய லட்சியத்தோடு புறப்படப் போகிறது' - துரைமுருகன்