சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நபார்டு வங்கியின் தலைவர் டாக்டர் ஜி.ஆர். சிந்தாலாவை சந்தித்து, நபார்டு கடனுதவி மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விவாதித்தார். மேலும் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டனர்.
நபார்டு வங்கி தலைவர் சிந்தாலாவுடன் முதலமைச்சர் ஆலோசனை - CM consults with NABARD Bank Chairman
சென்னை: நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கரூர் மாவட்டம் , நஞ்சைபுகளூரில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணிக்கு நபார்டு வங்கி கடனுதவி அனுமதி கடிதத்தை தமிழ்நாடு முதலமைச்சரிடம் நபார்டு வங்கியின் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வில், தலைமைச் செயலர் க.சண்முகம், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹன்ஸ் ராஜ் வர்மா, நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல தலைமை பொது மேலாளர் எஸ். செல்வராஜ், பொது மேலாளர் பைஜூ என்.குரூப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.