தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக நலப் பணியாளர் ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் வாழ்த்து! - Stalin

மதுரையில் பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை நேரில் சந்தித்து கலைஞர் திருவுருவ சிலையை கொடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Chennai
சென்னை

By

Published : Aug 17, 2023, 2:05 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஆக்ஸ்ட் 17) மதுரையில், பல்வேறு சமூகப் நலப் பணிகளை ஆற்றி வரும் மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் முனைவர் ராஜேந்திரன் என்பவரை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது, அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, சால்வை அணிவித்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையையும் வழங்கினார்.

மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன், திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட ராஜேந்திரன், மதுரை மாநகராட்சி, திரு.வி.க மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 லட்ச ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார்.

இதையும் படிங்க:Jailer collection: 'விக்ரம்' மொத்த வசூலை 7 நாட்களில் முறியடித்த "ஜெயிலர்".. தலைவர் காட்டுல அடைமழை தான்!

மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். அதுமட்டுமின்றி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்து உள்ளார்.

இந்நிலையில், சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி, அவரது சமூகப் நலப் பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார். தொடர்ந்து ராஜேந்திரனை சந்தித்த தருனத்தை தனது சமூக வலைதள பக்கத்திலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து உள்ளார்.

"பாசத்துக்குப் பெயர் போன மதுரையில் பாசமிகு பெரியவர் தத்தநேரி இராஜேந்திரன் அவர்களைச் சந்தித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அடுத்தடுத்த தலைமுறைகள் படித்திட வேண்டும் என்ற முனைப்போடு அவர் ஆற்றும் கல்விப் பணிகள் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு மதுரை மக்களால் பேசப்படும் என்பது உறுதி. அவர் போன்ற மனிதர்களோடு உறவாடும் நேரங்களில் காலம் சற்றே உறைந்து நிற்காதா!" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:Aarudhra Scam: துபாய் போனாலும் விடமாட்டோம்..! அதிரடி ஒப்பந்தம் போட்ட தமிழ்நாடு போலீஸ்..

ABOUT THE AUTHOR

...view details