தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!

சென்னை: பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

eps
eps

By

Published : Jan 26, 2020, 7:27 PM IST

இதுகுறித்து முதலமைச்சர், ' தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக பத்ம பூஷன் விருதினைப் பெறும் வேணு சீனிவாசன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

பத்மஸ்ரீ விருதினைப் பெறும் லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ், எஸ். ராமகிருஷ்ணன், காலீ ஷாபி மெகபூப், ஷேக் மெகபூப் சுபானி மற்றும் பிரதீப் தலப்பில் ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தனது சார்பாகவும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

மேலும் அவர், 'விருது பெற்றவர்கள் மென்மேலும் பல விருதுகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்பது தனது விருப்பம்' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மேரி கோமிற்கு பத்ம விபூஷன், பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு...

ABOUT THE AUTHOR

...view details