தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இந்திய மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு கிளையின் கூட்டம் காணொலி மூலம் இன்று (ஜூலை 1) நடைபெற்றது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, மருத்துவர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மருத்துவர் தினம்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து! - எடப்பாடி க.பழனிசாமி
சென்னை: மருத்துவர் தினத்தை முன்னிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Chief Minister congratulates doctors
அப்போது காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்திய மருத்துவச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும், கரோனா வைரஸ் தாக்குதல் உள்ள இந்த காலகட்டத்தில் மருத்துவர்கள் தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்து, இடையூறுகளை பெரிதும் பொருட்படுத்தாது மகத்தான சேவை புரிகின்ற மருத்துவர்களுக்கு, இந்த மருத்துவர் தினத்தில் தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.