தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சர் இரங்கல் - chennai district news

சென்னை: தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் இரங்கல்
முதலமைச்சர் இரங்கல்

By

Published : Jan 13, 2021, 5:30 PM IST

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நேற்று (ஜன.12) தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் மின்சாரம் தாக்கிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கணேசன், கல்யாணராமன், கௌசல்யா, நடராஜன் ஆகிய நான்கு நபர்களும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்
அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்து குறித்து அறிந்தவுடம் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டேன்.

இந்த விபத்தில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும்; சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மின்கம்பி மீது பேருந்து உரசியதில் 4 பேர் உயிரிழந்த விவகாரம் - அறிக்கை கேட்கிறது மனித உரிமைகள் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details