தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல் - Tindivanam Ramamurthy

திண்டிவனம் ராதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மமூர்த்தி மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் இரங்கல்
முதலமைச்சர் இரங்கல்

By

Published : Aug 8, 2021, 1:21 PM IST

சென்னை: இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திண்டிவனம் ராமமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன்.அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து-அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திண்டிவனம் ராமமூர்த்தி,மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி தமிழ்நாட்டிற்கு பெரும் பெருமை சேர்த்தவர். மறைந்த பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்.

முதலமைச்சர் இரங்கல்

தமிழ்நாட்டு நலனுக்காகவும்- உரிமைகளுக்காகவும் பாடுபட்டு- பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும்- ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்

ABOUT THE AUTHOR

...view details