திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செல்லச்சாமி மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைவருமான செல்லச்சாமி உடல்நலக் குறைவால் இன்று (டிச.7) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மறைந்த செல்லச்சாமி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது, ஒட்டன்சத்திரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர். தொகுதி மக்களின் அன்பை பெற்றவர்.