இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு தனது பேச்சு, செயல் மற்றும் தலைமைப் பண்புகளால் தமிழ்நாடு விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்ந்தார். 1973ஆம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் விவசாய மாநாடுகளை நடத்தி விவசாயிகளின் உரிமைகளுக்காக பாடுபட்டார்.
தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காக பாடுபட்ட அவர், விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்தபோதுதான் உயிரிழந்தார். அவரது நினைவு நாளான இன்று ( 21.12.2020 ) அவரைப் போற்றுவதில், நாம் எல்லாம் பெருமை அடைகிறோம்.