தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு வழக்குகள் திரும்பப் பெறப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு - tamilnadu assembly meeting news

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் சட்ட நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று திரும்பப் பெறுப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Chief Minister announced that Jallikattu cases will be withdrawn
ஜல்லிக்கட்டு வழக்குகள் திரும்பப் பெறப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

By

Published : Feb 5, 2021, 6:49 PM IST

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு பதிலுரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் 644 திட்டங்கள் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு, அதில் 607 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 198 திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்து இருக்கின்றன, 409 திட்டங்கள் முடிவடையும் நிலையிலும், 31 திட்டங்களுக்கு ஆயத்தப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், 6 திட்டங்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்றார்.

மேலும், "ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் மக்களின் உணர்வை பார்க்க முடிந்தது. அந்தப் போராட்டத்தில் காவலர்களைத் தாக்கியது, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் சட்ட நிபுணர்கள் ஆலோசனை பெற்று திரும்ப பெறப்படும்" என்ற அறிவிப்பை வழங்கினார்.

இதையும் படிங்க:விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details