இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், "இன்று 81ஆவது பிறந்த நாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திப்பதாக வாழ்த்து தெரிவித்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸை தொலைபேசியில் அழைத்தேன்.