தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் கட்சி, தனிநபர்கள் வங்கிக் கணக்கை கண்காணிக்க தனிப்படை- சத்யபிரத சாகு - சட்டப்பேரவை தேர்தல்

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவரின் வங்கிக் கணக்குகள், பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

Satyaprada
சத்யபிரதசாகு

By

Published : Feb 26, 2021, 3:25 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு இன்று கூறுகையில், "தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடைமுறைக்கு அமல்படுத்தப்படும். சட்டப்பேரவை நடத்த எந்தத் தடையும் இல்லை. ஆனால் அரசு எவ்வித புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்த அனைத்து கட்சிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன.

அதன்பேரில், சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்துவதற்கு ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. தற்போது 45 துணை ராணுவ கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு ஆயிரம் வாக்காளர்கள் மட்டும் வாக்களிக்க முடியும். கரோனா பரவலை தடுக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் தகுந்த இடைவெளி நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். 1950 என்ற எண்ணில் தேர்தல் தொடர்பான புகார்கள் 24 மணி நேரம் அளிக்கலாம்.

அனைத்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அனைவரின் வங்கி கணக்குகள், பணப்பரிவர்த்தனைகள் கண்காணிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் ரெட் அலார்ட் சிஸ்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த அறிவுறுத்தியது. அந்த நடைமுறை செயல்படுத்த சாத்தியமில்லை" எனத் தெரிவித்தார்.

தையும் படிங்க:ரியல் எஸ்டேட் துறையில் ஊழல்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details