ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் இன்று (ஜன.7) தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் நடந்த சிறப்பு வாக்காளர் முகாமில் பெயர் சேர்ப்பு, நீக்குதல், முகவரி மாற்றம் என 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தும் நிலை குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது