தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 23, 2019, 3:23 PM IST

Updated : Sep 23, 2019, 3:59 PM IST

ETV Bharat / state

'விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் உரிய ஆவணங்களுடன் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லலாம்' - சத்ய பிரத சாகு தகவல்!

சென்னை: 'விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பரிசுப் பொருட்கள் கொண்டு செல்பவர்கள், உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லலாம், ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்' என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்தார்.

சத்ய பிரத சாகு

சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டபேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும்; விழுப்புரம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்தார். மேலும் அவர் வரும் அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்பவர்கள், உரிய ஆணவங்களுடன் கொண்டு செல்லலாம். ஆவணம் இல்லை என்றால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இரண்டு தொகுதிகளிலும் தலா மூன்று பறக்கும் படையினரும், மூன்று நிலை கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபவர். தேர்தல் நடக்கும் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தலா ஒரு பறக்கும் படையும், நிலைக்குழுவும் கண்காணிப்பில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விக்கிரவாண்டியில் மொத்தம் 275 வாக்குச்சாவடிகளில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 456 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த இருக்கிறார்கள் என்றும் அதேபோல் நாங்குநேரியில் 299 வாக்குசாவடிகளில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்களர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

Last Updated : Sep 23, 2019, 3:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details