சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை ஆணையாளர்கள், கண்காணிப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்: சத்யபிரதா சாஹூ
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சத்யபிரதா சாஹூ உத்தரவு
அப்போது பேசிய அவர், இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி சீரான முறையில் தேர்தலை நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ள 7 ஆயிரத்து 316 வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.