தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை ஆதரித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,
"ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் உருவாக்கமே ஜெயலலிதா மறைந்த பிறகுதான். இதன் முடிவு ஏப்ரல் 18-க்கு பின் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்துத்துவா வேறு, இந்து மதம் வேறு. நாம் அனைவரும் இந்துக்கள்தான். ஆனால் இந்துத்துவா என்று போனால் நாம் வர்ணாசிரமம், வர்ணத்திற்குள் வந்துவிடுவோம்.
காந்தியை கொன்ற கோட்சே இருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் குழந்தைதான் பாஜக.
45 ஆண்டுகளாக இல்லாத வேலை வாய்ப்பு பற்றாக்குறை பாஜகவினால் ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்புதான் காங்கிரசின் முதல் அத்தியாயம். மத்திய அரசில் நான்கு லட்சம், மாநிலத்தில் இருபது லட்சம் வேலை காலியாக உள்ளது. இதனை ஒன்பது மாதங்களில் நாங்கள் நிரப்புவோம். இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தேவை. மொத்த உற்பத்தியில் மூன்று விழுக்காடு மருத்துவத்துறைக்கு ஒதுக்குவோம். கிறிஸ்து பிறந்ததிலிருந்து 900 ஆண்டுகளுக்கு முந்தைய மொழி தமிழ் என நிரூபிக்கப்பட்டுள்ளது. கல்விக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற நிலையை காங்கிரஸ் உருவாக்கியது. இந்த ஐந்து ஆண்டுகளில் யாருக்கும் கல்விக்கடன் கிடைக்கவில்லை என்றார்.