தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்பந்து விளையாடிய செஸ் வீரர்கள்... - அமைச்சர் மெய்யநாதன்

சென்னை நேரு விளையாட்டரங்கில் செஸ் வீரர்கள் பங்கேற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

Etv Bhaகால்பந்து விளையாடிய செஸ் வீரர்கள்rat
Etv Bharatகால்பந்து விளையாடிய செஸ் வீரர்கள்

By

Published : Aug 5, 2022, 7:53 AM IST

சென்னை : 44- வது செஸ் ஒலிம்பியாட் -2022 போட்டி மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28- ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 187- நாடுகளைச் சார்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். நேற்று (04/08/22) ஓய்வு நாள்.

செஸ் வீரர்களை உற்சாகப்படும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் சென்னை புட்பால் கிளப் இணைந்து நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டி நேற்று (04/08/2022) சென்னை நேரு விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். 60- க்கும் மேற்பட்ட வீரர்கள் , நிர்வாகிகள் பங்கேற்ற லீக் போட்டியில் ஆப்ரோ அமெரிக்கா அணி (Afro America) முதலிடம் , பிடே அணி (FIDE) இரண்டாமிடம் , யூரோப் அணி ( Europe) மூன்றாமிடம், இந்திய அணி நான்காமிடம் பெற்றது.

கால்பந்து விளையாடிய செஸ் வீரர்கள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இப்போட்டியில் பிடே தலைவர் ஆர்க்டே துவர்கோவிச், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத்தலைவர் .அசோக் சிகாமணி ஆகியோர் விளையாடினர்.

இதையும் படிங்க : காமன்வெல்த் போட்டிகள் - 200 மீ ஓட்டப்பந்தயத்தில் அரையிறுதிக்கு ஹிமா தாஸ் முன்னேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details