சென்னை:44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது, இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஓபன் A Vs உஸ்பெகிஸ்தான் :ஹரிகிருஷ்ணா - அப்டு சட்டோரோவ் விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹரி, 34 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து விதித் சந்தோஷ் - யக்குபோவ் ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விதித், 60 வது நகர்வில் ஆட்டத்தை சமன் செய்தார்.
தொடர்ந்து அர்ஜூன் எரிகேசி - ஜவோகிர் சிண்டாரோவ் விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய அர்ஜுன், 49 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமனில் முடித்தார். அடுத்தாக சசிகிரண் - சாம்சித்தின் ஆடுகையில், வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய சசி, 74 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார்.
இதன் மூலம் 2-2 என்ற புள்ளிக் கணக்கில் போட்டி சமன் செய்யப்பட்டது. மேலும் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பிரித்து வழங்கப்படும்.
ஓபன் B Vs அர்மேனியா :முதலில் குகேஷ் - கேப்ரியல் சரிகிஸ்ஸான் விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 41 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்ததாக சரின் நிஹால் - ராண்ட் மேல்கும்யான் ஆட்டத்தின்போது, கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சரின், 30 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார்.
இதனையடுத்து விளையாடிய அதிபன் பாஸ்கரன் - சாம்வேல், வெள்ளை நிற காய்களை வைத்து, 40 வது நகர்த்தலில் அதிபன் தோல்வியைத் தழுவினார். அடுத்ததாக ரவுணக் சத்வானி - ராபர்ட் ஹோவ்கன்னிஸ்யன் விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ரவுணக், 51 வது நகர்த்தலில் தோல்வியைத் தழுவினார். இதனால் 2.5-1.5 புள்ளிக்கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
ஓபன் C Vs லிதுனியா :சூர்யா சேகர் - டிடாஸ் ஸ்ட்ரீமா விசியஸ் ஆடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய சூர்யா, 47 வது நகர்த்தலில் போட்டியை சமன் செய்தார். அதன் பின்னர் சேதுராமன் - கரோலிஸ் ஜக்ஸ்டா விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய சேது, 42 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து அபிஜித் குப்தா - புல்டின் எவிசியஸ் ஆடிய ஆட்டத்தின்போது, வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய அபிஜித், 44 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பின்பு அபிமன்யு புராணிக் - வேலெரி கசகவுஸ்கி களமாடும்போது, கருப்ப நிற காய்களுடன் களமிறங்கிய அபி, 43 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி அடைந்தது.