தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட்: 3 வது சுற்றிலும் இந்திய அணிகளின் தொடர் வெற்றி! - Indian teams in 3rd round

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3 வது சுற்று ஆட்டத்திலும், எதிர்த்து போட்டியிட்ட அனைத்து அணிகளையும் தோற்கடித்து, தலா 6 புள்ளிகளை இந்திய ஆடவர், மகளிர் அணிகள் பெற்று வெற்றி பெற்றுள்ளன.

செஸ் ஒலிம்பியாட்: 3 வது சுற்றிலும் இந்திய அணிகளின் அடுத்தடுத்த வெற்றி!
செஸ் ஒலிம்பியாட்: 3 வது சுற்றிலும் இந்திய அணிகளின் அடுத்தடுத்த வெற்றி!

By

Published : Aug 1, 2022, 7:35 AM IST

சென்னை:44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 தொடங்கி, ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய அணி சார்பாக களம் கண்ட வீரர், வீராங்கனைகளில் 9 பேர் ஆட்டத்தை சமனில் முடித்தனர். இதில் ஒருவர் மட்டும் தோல்வியை தழுவ, மீதமுள்ள 14 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய ஓபன் 1வது அணி Vs கிரீஸ் :ஹரிகிருஷ்ணா - டிமித்ரியோஸ் கலந்து கொண்ட ஆட்டத்தில், ஹரிகிருஷ்ணா வெள்ளை நிற காய்களுடன் விளையாடி, 44வது நகர்வில் வெற்றி பெற்றார். அடுத்ததாக விதித் குஜராத்தி - நிக்கோலஸ் ஆடிய ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய விதித், 30 வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டத்தை சமனில் முடித்தார்.

தொடர்ந்து அர்ஜூன் எரிகைசி - மஸ்ட்ரோவாசிலிஸ் ஆடும்போது, வெள்ளை நிற காய்களை நகர்த்திய அர்ஜுன், 51 வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி அடைந்தார். அதேபோல், சசிகிரண் - லோனிடிஸ் மோதுகையில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய சசி, 66 வது நகர்த்தலில் ஆட்டத்தை சமன் செய்தார். இதன் மூலம் 3 - 1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய ஓபன் 2 வது அணி Vs ஸ்விட்சர்லாந்து :குகேஷ் - நிகோ மோதும்போது, கருப்பு காய்களில் களம் கண்ட குகேஷ், தனது 37வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்ததாக நிஹில் சாரின் - செபாஸ்டின் விளையாடுகையில், வெள்ளை நிற காய்களை நகர்த்திய நிஹில், 27 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார்.

தொடர்ந்து பிரக்ஞானந்தா - யானிக் ஆடும்போது, கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 67 வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். அதேபோல், ரவுனக் சத்வாணி - ஃபாபியன் ஆட்டத்தில், வெள்ளை காய்களை வைத்து விளையாடிய ரவுனக், 38வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனால் 4-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய ஓபன் 3 வது அணி Vs ஐலாந்து :சூர்ய சேகர் கங்குலி - ஜோர்வார் ஸ்டெயின் மோதிய ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய கங்குலி, 54 வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டத்தை சமன் செய்தார். பின்னர், சேதுராமன் - ஹான்ஸ் மோதுகையில், கருப்பு காய்களுடன் களமிறங்கிய சேது, 36 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, அபிஜித் குப்தா - குட்மண்டூர் ஆடிய ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களை நகர்த்திய அபிஜித், 36 வது நகர்த்தலில் வெற்றி அடைந்தார். மேலும், அபிமன்யு புரானிக் - கிரிட்டர்சன் மோதிய ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட அபிமன்யு, 75 வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டத்தை சமனில் முடித்தார். இதன் மூலம் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் 1 வது அணி Vs இங்கிலாந்து :ஹரிகா - ஜோவன்கா ஹவுஸ்கா விளையாடுகையில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹரிகா, 40 வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டத்தை சமனில் முடித்தார். பின்னர், வைஷாலி - டோமா ஆடிய ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களை நகர்த்திய வைஷாலி, 65 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

அதேபோல், தான்யா சச்தேவ் - யாவ் லான் மோதும்போது, கருப்பு நிற காய்களுடன் விளையாடிய தான்யா, 51 வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். தொடர்ந்து, சமன்பக்தி குல்கர்னி - அக்‌ஷயா விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களம் கண்ட அக்‌ஷயா 59 வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி அடைந்தார். இதனால் 3-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி அடைந்தது.

இந்திய மகளிர் 2 வது அணி Vs இந்தோனேசியா :வந்திகா அகர்வால் - ஐரின் கரிஷ்மா ஆடுகையில், கருப்பு காய்களுடன் விளையாடிய வந்திகா, 45 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர், பத்மினி ராவுத் - மெதினா வர்டா மோதும்போது, வெள்ளை நிற காய்களுடன் களம் கண்ட பத்மினி, 58 வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டத்தை சமன் செய்தார்.

தொடர்ந்து, சவுமியா சாமிநாதன் - ஃபரிஹா மோதிய ஆட்டத்தில், கருப்பு காய்களுடன் விளையாடிய சவுமியா, 73 வது நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். மேலும், கோமஸ் மேரி ஆன் - தேவி சித்ரா மோதும்போது, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய தேவி, 43 வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டத்தை சமன் செய்தார். இதன் மூலம் 3-1 என்ற புள்ளியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் 3 வது அணி Vs ஆஸ்திரியா :ஈஷா கர்வாதே - கேத்ரினா விளையாடும்போது, வெள்ளை நிற காய்களுடன் களம் கண்ட ஈஷா, 27 வது நகர்த்தலுக்கு பிறகு ஆட்டத்தை சமனில் முடித்தார். அதேபோல், நந்திதா - சியாரா விளையாடத் தொடங்கும்போது, நந்திதாவின் எதிர் போட்டியாளர் வராத காரணத்தால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பின்னர், வர்ஷினி ஷாகிதி - நிகோலா ஆடிய ஆட்டத்தின்போது, வெள்ளை காய்களுடன் களமிறங்கிய வர்ஷினி, 46வது நகர்த்தலுக்கு பிறகு தோல்வியைத் தழுவினார். மேலும், பிரத்யுஷா போடா - எலிசபெத் மோதிய ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரத்யுஷா, 59 வது நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்றார். இதனால் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

இவ்வாறு மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 வது அணி வீராங்கனை வர்ஷினி மட்டும் தோல்வியைத் தழுவுயுள்ளார். அதேநேரன், மூன்று சுற்றுகளிலும் 4-0 என ஒயிட் வாஷ் வெற்றி பெற்ற இந்தியாவின் ஓப்பன் பிரிவு 2 வது அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் - இந்திய ஆடவர் அணிகள் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details