தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஸ் ஒலிம்பியாட் போட்டி; தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்து

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்

By

Published : May 14, 2022, 7:08 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில், நிகழ்வை நடத்துவது தொடர்பாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே14) அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்தப் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர்” செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுதிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் சிறப்பாக நடைபெற முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய செஸ் பயிற்சியாளர் ஸ்ரீநாத் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தப் போட்டியில் பங்கேற்க 5 நபர்கள் தமிழகத்திலிருந்து தேர்வாகி உள்ளனர். மேலும் கூடுதலாக வீரர்கள் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டிகளுக்கு எத்தகைய தேவைகள் இருந்தாலும் அரசு பூர்த்தி செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை எப்போது கிடைக்கும்?

ABOUT THE AUTHOR

...view details