சென்னை:நடிகர் விமல் நடித்த திரைப்படம், மன்னர் வகையறா. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை.
நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் போட்ட உயர் நீதிமன்றம் - என்னவாம்? - Vimal in cheque fraud case
செக் மோசடி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சிறு வழக்குகளுக்கான சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம் போட்ட உயர் நீதிமன்றம் - என்னவாம்? Cheque bounce charges cost to actor vimal small cases court](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1200-675-18288254-thumbnail-16x9-done.jpg)
பின்னர், அந்த தொகையை காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையினை வங்கியில் செலுத்தியபோது அவர் கணக்கில் இருந்து பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து நாலரை கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன்வரவில்லை. இதையடுத்து, முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து வழக்கு விசாரணையை நீதிபதி தாரணி தொடங்கினார்.
இதன்பின்னர் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கினை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூபாய் 300 வழக்கு செலவு (அபராதம்) விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.