தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடங்கியது வடகிழக்குப் பருவமழை - சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை! - சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை முதலே வானம் இருண்டு காணப்பட்ட நிலையில் இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

chennei-heavy-rain

By

Published : Oct 17, 2019, 10:32 AM IST

Updated : Oct 17, 2019, 12:24 PM IST

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, போரூர் உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதாகவும், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தொடங்கியது வடகிழக்குப் பருவமழை - சென்னையில் கனமழை
Last Updated : Oct 17, 2019, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details