தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா போலீஸ பாத்திருப்பீங்க... கரோனா ஆட்டோவ பாத்திருக்கீங்களா'

சென்னை: ஆலந்தூரில் கரோனா உருவம் போல ஆட்டோவை வடிவமைத்து, அதன் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிய மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

chennai's corona auto spreads awarness on wearing mask
chennai's corona auto spreads awarness on wearing mask

By

Published : Apr 24, 2020, 2:05 PM IST

Updated : Apr 24, 2020, 9:00 PM IST

தமிழ்நாட்டிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை உள்ளது. தீவிர பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை ஆகியவை சார்பில் பல்வேறு காணொலிக் காட்சிகள், ஓவியம் ஆகியவை மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக் கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.

கரோனா ஆட்டோ
இந்த நிலையில் ஆலந்தூரில் கரோனா வைரஸ் தோற்றத்தில் ஆட்டோவை உருவாக்கி, அதன்மூலம் அதிகமாக வெளியில் வராமல் வீட்டில் இருக்கும்படியும், முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டுமெனவும் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும்போது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்து, அவர்களுக்கு முகக் கவசங்களையும் மாநகராட்சி அலுவலர்கள் வழங்கினர்.
Last Updated : Apr 24, 2020, 9:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details