சென்னை: புதிய விமான நிலையம் அமைப்பதற்கு திருவள்ளூர் மாவட்டம் பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஆகிய 2 இடங்களில் அமைப்பது குறித்து, டெல்லியில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சருடன் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னையின் 2ஆவது பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் - சென்னை
சென்னையின் 2ஆவது பன்னாட்டு விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பரந்தூரில் அமைகிறது என விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையின் 2ஆவது பன்னாட்டு விமான நிலையம் பரந்தூரில் அமைகிறது
இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இது தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சென்னையின் 2ஆவது பன்னாட்டு விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பரந்தூரில் அமைகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தனக்கென தனி விமானம் - குடும்பத்தோடு உலகம் சுற்றும் இன்ஜினியர்!