தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போதை மாத்திரை கேட்டு இளைஞர் கடத்தல்

சென்னை:கிண்டியில் போதை மாத்திரை கேட்டு இளைஞரை கடத்திய ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

kidnap
kidnap

By

Published : Dec 5, 2019, 3:11 PM IST

சென்னை பரங்கிமலையை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜாராம்(61). இவர் தனது மகன் காமேஷ் (23) உடன், இரு சக்கர வாகனத்தில் அம்பாள் நகர் வழியாக நேற்று இரவு கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காவல் துறையினர் வேடத்தில் வந்த ஐந்து பேர், போதை மாத்திரை கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று காமேஷை மட்டும் அழைத்து சென்றுள்ளனர். ஏற்கெனவே போதை மாத்திரை கடத்தல் வழக்கில் கைதாகி, ஒரு மாதம் சிறையில் இருந்ததால், காமேஷை அவர்களுடன் ராஜாராம் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், வீடு திரும்பிய ராஜாராமின் செல்ஃபோன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர், 'உங்களுடைய மகன் காமேஷை கடத்தி விட்டோம். 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறோம்' என்று மிரட்டி விட்டு செல்ஃபோனை துண்டித்தனர்.

இதையடுத்து, தன்னுடைய மகனை அழைத்து சென்றது காவல் துறையினர் இல்லை என்பதை அறிந்த ராஜாராம், இது குறித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணையில், காமேஷ் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், அவரிடம் இருந்து போதை மாத்திரையை பெறுவதற்காகவே அவர் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையில், கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய காமேஷ் வீடு திரும்பினார். அவரிடம், கடத்திய கும்பல் யார்? ஏதற்காக கடத்தப்பட்டார் உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் கைது - பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்த போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details