தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சி ஊழியர் மினி பேருந்தில் சிக்கி உயிரிழப்பு!

சென்னை: மாநகராட்சியில் பூங்கா பணியாளராகப் பணிபுரிந்துவந்த பெண் ஒருவர் மினி பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

accident
accident

By

Published : Sep 8, 2020, 12:49 PM IST

காஞ்சிபுரம் அருகே உள்ள வாலாஜாபாத் ஆறுமுகப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் வைசாலி (25). இவர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், பூங்கா பராமரிப்புப் பணியாளராக வேலை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் விமான நிலைய நிறுத்தத்தில், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வழக்கம்போல் அவர் வேலைக்குச் சென்றார். பின்னர் வேலை முடித்துவிட்டு மெட்ரோ ரயிலில், சென்னை விமான நிலையம் நிறுத்தம் வந்த பிறகு அங்கிருந்து அவர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது குரோம்பேட்டை காவல் நிலையம் எதிரே சென்றுகொண்டிருந்தபோது அவர் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி உள்ளது, அதனால் வைசாலி எதிபாராதவிதமாக கீழே விழுந்துள்ளார்.

அங்கு பின்புறம் வந்துகொண்டிருந்த தனியார் மினி பேருந்தின் சக்கரத்தில் அவர் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details