சென்னை: டிபி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் சந்தியா என்ற மகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வேலையை விட்டு நின்றுள்ளார். இதுகுறித்து தாயார் தேவிக்கு சொல்லாமல் மறைத்து வந்தார். அதோடு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வீட்டிலிருந்தே வேலை செய்வதாக தெரிவித்துள்ளார்
மூன்று மாதம் கழித்து குறித்து தாய் தேவி சந்தியாவிடம் சம்பளம்குறித்து கேட்டுள்ளார். இதனால் சந்தியா ஆன்லைன் லோன் செயலி மூலம் 80 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்று, தாயிடம் கொடுத்தார். இதையடுத்து கடன் தொகையை கட்டுமாறு ஆன்லைன் லோன் செயலி நிறுவனத்தினர் சந்தியாவிடம் கேட்டுள்ளனர். இதற்காக சந்தியா வீட்டில் இருந்த 12 சவரன் நகையை திருடி, அதன் மூலமாக லோன் கட்டினார்.