சென்னை மாநகராட்சியில் கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் எண்ணிக்கையும் அதற்கு சமமாக உள்ளது.
தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியது. பாதிக்கப்பட்டவர்களில் 95 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விழுக்காடும் நான்காக குறைந்துள்ளது.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 916 பேர், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 074 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 ஆயிரத்து 651 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்,
அண்ணா நகர் - 21802 பேர்
கோடம்பாக்கம் - 21579 பேர்
தேனாம்பேட்டை - 18830 பேர்
ராயபுரம் - 17824 பேர்
தண்டையார்பேட்டை - 15488 பேர்