தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கனமழை தீவிரமாகப் பெய்து வருகின்ற நிலையில்ல் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்," குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். குறிப்பாக இன்று கடலூர் மாவட்டம் அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான முதல் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது.