தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: கணவர் கண்முன்னே பெண் உயிரிழப்பு - Truck collides two-wheeler in Chennai

சென்னை: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து

By

Published : Jan 8, 2020, 3:08 PM IST

சென்னை மீஞ்சூர் ராமிரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (28). இவர் எம்.எஃப்.எல். நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி ஜெயா (24). நேற்று மாலை உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக யுவராஜ் தனது இருசக்கர வாகனத்தில் தனது மனைவியை பின்னால் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, திருவள்ளூர் ஜி.என்.டி. சாலை கூட்ரோடு சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் பின்புறம் வேகமாக மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி தம்பதி இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளனர்.

இதில் பின்புறம் அமர்ந்திருந்த ஜெயாவிற்கு தலை, இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. கமலேஷ் தலைக்கவசம் அணிந்திருந்ததால் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

உடனே கமலேஷ் பலத்த காயமடைந்த ஜெயாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு ஜெயாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் கூறியுள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: ரசாயன கழிவுகள் ஏற்றி வந்த லாரி தீ விபத்தில் நாசம்!

ABOUT THE AUTHOR

...view details