தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு! - chennai weather update

சென்னை: வெப்பச்சலனம், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலப் பிரிவு தெரிவித்துள்ளது.

chennai weather update
chennai weather update

By

Published : May 3, 2020, 2:28 PM IST

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையைப் பொறுத்தவரை காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் தெளிவாகவும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் காணப்படும். இதன் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையில், "தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்துவரும் இரு தினங்களுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறியுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கன்னியாகுமரி மாவட்டம் சூரளக்கோட்டில் 4 செ.மீ. மழையும், தொண்டி, பெரியநாயக்கன்பாளையம், நீலகிரி மாவட்டம் கிளன்மார்கனில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

வெப்பச்சலனம், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பார்க்க: 'கல்வி வணிகம் அல்ல, கட்டணத்தை தள்ளுபடி செய்க'- உச்ச நீதிமன்றத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details