தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீனவர்கள் ஏப்ரல் 26ஆம் தேதி கடலுக்குச் செல்ல வேண்டாம்...!' - வானிலை ஆய்வு மைய இயக்குநர்

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவுவதால், ஏப்ரல் 26ஆம் தேதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் வரும் 26ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்!

By

Published : Apr 24, 2019, 6:59 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது ஏப்ரல் 26 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

மேலும், இந்தக் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக, கூடுதல் வலுபெற்று தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதனால் மீனவர்கள் யாரும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் கடலுக்குள் செல்ல வேண்டாம்' என அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details