இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 1.2.2020 முதல் 120 நாள்களுக்கு 7776 மி.கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும்.
தற்போது தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதுபோல வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து 6.6.2020 முதல் 15.6.2020 முடிய 10 நாள்களில் 7 நாள்கள் மட்டும் பாசனத்திற்கு நீர் விநியோகம் செய்தும், 3 நாள்கள் இடைநிறுத்தம் செய்தும், 241.92 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது.