கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பல்பொருள் அங்காடி, மார்க்கெட் உள்ளிட்ட கடைகளுக்கு செல்லும் மக்கள், சமூக இடைவெளி விட்டுச் சென்று தங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இட நெருக்கடியில் செயல்பட்டு வரும் மார்க்கெட்டுகள், தற்காலிகமாக பகுதியின் முக்கிய இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், வில்லிவாக்கம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றும் விதமாக வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் ரெங்கநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.