சென்னை : வருகிற 21ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் (பருவ) தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் மாணவர்கள் கல்வியில் தகுதி பெற வேண்டும் என்பதை கருதி ஆன்லைன் தேர்வு ரத்து செய்து நேரடியாக தேர்வுகள் நடத்துவது என தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஜன.21 பருவத் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை பல்கலைக்கழகம் ஜன.21ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நேரடி தேர்வுகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜனவரி மாதத்தில் நேரடித் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி 20 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, 21ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளையும் ஒத்திவைத்தது சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க : விரிவுரையாளர் தேர்வு உத்தேச விடைகள்: ஜன. 10-க்குள் மாற்றுக் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தல்