தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை பல்கலைக்கழக இறுதி பருவத்தேர்வு தேதி விதிமுறைகள் அறிவிப்பு - இறுதி பருவத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை: சென்னை பல்கலைக்கழகம், அதன் இணைப்பு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெறும் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான  தேர்வுகளுக்கான தேதி, விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்

By

Published : Sep 15, 2020, 3:49 PM IST

Updated : Sep 15, 2020, 3:56 PM IST

சென்னை பல்கலைக்கழகம், அதன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் செப்டம்பர் 21 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இளங்கலை, முதுகலை இறுதி பருவத் தேர்வினை எழுத உள்ள மாணவர்களும், ஏற்கனவே இறுதி பருவத்தில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் மட்டுமே இந்தத் தேர்வினை எழுத முடியும்.

மாணவர்களுக்கான தேர்வுகள் 90 நிமிடங்களுக்கு நடைபெறும். காலை 9.30 மணி முதல் 11 30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 3.30 வரையும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் அவர்களுக்குரிய தனிப்பட்ட இணையதள பக்கத்தில் இருக்கும்.

மாணவர்களுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரையும் நடைபெறும். தேர்வு நடைபெறுவதற்கு 30 நிமிடம் முன்னர் மாணவர்களுக்கு வினாத்தாள் ஆன்லைன் மூலம் அனுப்பப்படும்.

மாணவர்கள் வினாத்தாள்களை அவர்களுக்குரிய இணையதள பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல் அவர்களின் மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பப்படும்.

மாணவர்கள் ஏ4 தாளில் தேர்வினை 18 பக்கத்தில் எழுத வேண்டும். விடைத்தாள் மேல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண் உள்ளிட்டவற்றைப் பதிவுசெய்ய வேண்டும். மாணவர்கள் விடைகளை எழுதிய பின்னர் மீண்டும் இணையதளத்தில் விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

விடைத்தாள்களைச் சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வசதிகள் இல்லாதவர்கள் கல்லூரிகளுக்கு ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்பிவைக்கலாம் எனச் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Last Updated : Sep 15, 2020, 3:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details