தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழையால் சென்னைப் பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு! - கனமழையால் சென்னை பல்கலை தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: கனமழை காரணமாக சென்னைப் பல்கழைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படும் என துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

Chennai rain
Chennai rain

By

Published : Nov 28, 2019, 7:51 AM IST

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என இன்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காஞ்சி, வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details