சென்னைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இளங்கலை முதுகலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு 27 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி விண்ணப்பம்! - இளங்கலை முதுகலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள்
சென்னை : சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் பயில்வதற்கு 27 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் 2020- 21 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக மான்யக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை, முதுகலை, முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை பட்டய படிப்பு, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியவற்றிற்கு மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் 27ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
விருப்பமுள்ள மாணவர்கள் http://online.ideunom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். சென்னை பல்கலைக்கழகத்தின் 115 கற்றல் உதவி மையம் மூலமாகவும் சேரலாம். இதற்கான விபரங்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம் என அதில் கூறியுள்ளார்.