தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் ஆணையர் அலுவலகத்தில் விழுந்த மரம் - ஆவின் பாலகம் சேதம்! - chennai latest news

சென்னை: காவல் ஆணையர் அலுவலகத்தில் பழைமையான மரம் சாய்ந்து விழுந்ததில் புதிதாக கட்டப்பட்டுவந்த ஆவின் பாலகம் சேதமடைந்தது.

chennai-tree-fall-down
chennai-tree-fall-down

By

Published : Oct 29, 2020, 2:56 PM IST

சென்னையில் நேற்றிரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மூன்றாவது நுழைவு வாயில் அருகே இருந்த பழமையான மரம் ஒன்று இன்று காலை திடீரென்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதனை கண்ட பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அசாம்பாவிதம் ஏதும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. இந்த மரமானது காவலர்களுக்காக கட்டப்பட்டு வந்த ஆவின் பாலகம் மேல் விழுந்ததில் முழுவதுமாக சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மீட்பு படையினர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details